Breaking News :

Friday, April 19
.

' வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்'


' வாழ்வின் அர்த்தம்  மனிதனின் தேடல்' என்ற நூல்  ஹிட்லரின் வதை முகாமில் மரணத்தின் பிடியில் நாட்களை கடத்தி உயிர் பிழைத்து தப்பித்த  விக்டர் பிரான்க்கிளின் நினைவுகளும் அனுபவங்களும் கொண்ட நூல்.  Man's search for meaning என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது

நைந்துபோன மனிதன் தன்னைத்தானே தைத்துக்கொண்டு நம்பிக்கை இழக்காமல் சூழ்நிலையை வென்றெடுத்த சூத்திரம் இந்த நூல்.

விக்டர் உருவாக்கியதுதான் லோகோதெரபி என்ற உளவியல் கலை.

இந்த நூல் தமிழில் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் இந்த நூலைப் பரிந்துரை செய்திருக்கிறார்.

இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகள்  புதிய வாசகர்களை சென்றடைந்தன.

உலகநாயகனின் புத்தகப் பரிந்துரைகள் தொடர்ந்து வாசகர்களை வசீகரித்து வருகின்றன என்பது உண்மை

உலகநாயகனுக்கும்
பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி...


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.