கோட்டூர்புரம் பகுதியில், பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சரவணன் என்பவர், J-4 கோட்டூர்புரம் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டார். மேற்படி எதிரியிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது.
J-4 Kotturpuram Police team arrested Saravanan for attempting to snatch a chain from a woman in kotturpuram area. A knife was recovered from him.
சென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த பிரபா (பெ/45) என்பவர் 17.01.2022 அன்று இரவு, மத்திய கைலாஷ் அருகில் உள்ள கஸ்தூரிபாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்தபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர், முகவரி கேட்பது போல நடித்து, பிரபாவின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார், பிரபா தடுக்கவே, அந்த நபர் பிரபாவின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். மேற்படி சம்பவம் குறித்து பிரபா J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன் (வ/21) கோட்டூர்புரம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
On 17.01.2022, while Prabha (F/45) of Tharamani area was sitting at Kasthuriba Nagar bus stand near Madhya Kailash temple, an unknown person came near her, and pretending to be asking an address attempted to snatch gold chain from Prabha's neck. Prabha when prevented, he attacked Prabha with a knife and fled away.
In this regard, Prabha lodged a complaint at J-4 Kotturpuram PS.
A team led by the Inspector of Police (crime) J-4 Kotturpuram PS investigated the case and arrested Saravanan (M/21) of Kotturpuram. A knife was recovered from him. Legal action is being pursued against him.
#chennaipolice
#greaterchennaipolice
#chennaicitypolice
#shankarjiwalips