கைமாற்றை எதிர்பார்க்காமல் பாசத்தை பொழியும் உண்மையான நேச இதயம் தாய்... தாய் மட்டுமே.
நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள் எனச் சார்லி பென்னடோ கூறுவார். அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது.
இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது. அஃது எவ்வாறான நேசம் என்றால், நம்மிடம் திரும்பி எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை பொழிந்து கொண்டிருக்கும் நேசம் ஆகும்.
நாம் யார் யாரிடமோ நாம் அவர்களை நேசிக்கிறோம் எனக் கூறுகிறோம். ஆனால், ஒரு முறையாவது நம் தாயிடம் அவளை நேசிப்பதாகக் கூறி இருக்கிறோமா. அந்த வார்த்தைகளைத் தவிர அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
எந்த ஒரு தாயிடம் கேட்டாலும் அவள் கூறுவாள், குழந்தைகளைப் பெற்றெடுப்பதை விடக் கடினமானது அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பது தான் என்று. ஏனென்றால் பிறப்பின் பின் அக்குழந்தைக்கு விவரம் தெரியும் வரை தாயிடமே இருக்கின்றது. தாயைப் பார்த்துதான் உலகத்தைக் கற்றுக் கொள்கிறது. தாயைப் போலத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது.
ஆனால் குழந்தை எவ்வாறான மனிதன் ஆகப் போகின்றான் என்பதையே தாய் தான் தீர்மானிக்க வேண்டும். புரிதலும் தாயிடம் தான் அதிகமாக நடைபெறுகின்றது. தன் மகன் அல்லது மகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தாயால் புரிந்து கொள்ள முடியும். அதேபோல நமக்குப் பிடித்தவை பிடிக்காதவை உடம்பிற்குத் தீங்கு விளைவிப்பவை என அனைத்தையும் தாய் அறிவாள்.
நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றே தாய் முதலில் நினைப்பாள். அந்த தாயை வணங்கி போற்றுவோம்.
அன்பே சிவம் அம்மா