Breaking News :

Thursday, April 25
.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - விண்ணை முட்டும் விலைவாசி


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. 

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்சாரமும் இல்லாத சூழ்நிலையில் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதன் விளைவாக இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் பல இடங்களிலும் எழுந்துள்ளது. 

நேற்று இரவு தன்னெழுச்சியாக குவிந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஒரு ராணுவ வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. 

இந்த நிலையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய பகுதி, நுகெகோட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை போலீசார் ஊரடங்கு அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒவ்வொரு நாளையும் சாதாரணமாய் கடத்த பொதுமக்கள் படும் பாடும் பொது மக்களின் கோபத்தை சமாளிக்க ஆட்சியாளர்கள் படும்பாடும் பெரும் சிரமமாக மாறியுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.