பா.ஜ.க-வின் தமிழக தலைவர் எல்.முருகன், தமிழக அரசை குற்றம்சாட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது,,
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிவருகிறார்கள். மாணவர்களை குழப்பாதீர்கள். மாணவர்கள் கடந்த நான்கு வருடங்களாக நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு வந்துவிட்டனர்.
இன்றைக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களிடம் பீதியை உருவாக்காதீர்கள். மாணவர்களை தயார்படுத்துங்கள். அரசு பள்ளிகளை தயார்படுத்துங்கள். இதுதான் என்னுடைய கோரிக்கை.
இவ்வாற எல்.முருகன் கூறினார்.