Breaking News :

Friday, April 19
.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை - கெத்துக் காட்டும் கேரளா முதியவர்


கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவர் அப்பகுதி இளைஞர்கள் பலருக்கும் நட்பானவர். மம்மிக்கா.. மம்மிக்கா என்று ஊரில் இருக்கும் இளைஞர்கள் இவரை நட்பாக அழைத்து ஜாலியாக உரையாடுவது வழக்கம் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் அப்பகுதி போட்டோகிராபர் இவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளார். இவரின் தோற்றத்தைப் பார்த்த போட்டோகிராபர் ஷரீக், அட இந்த தாத்தா செம கெத்தாக இருக்கிறாரே என்று அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் இதற்கு மம்மிக்கா மறுத்துள்ளார். ஆனால் தான் எடுத்த போட்டோக்களை காட்டி மம்மிக்காவை போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனை அடுத்து மம்மிக்காவிற்கு கோட் சூட், மேக் அப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்காக இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்மிக்கா கூலாக கோட் சூட் அணிந்து, கண்ணாடி போட்டு , செம கெத்தாக இருந்துள்ளார். அதோடு கண்ணாடி போட்டுகொண்டு இவர் கார் பக்கம் நிற்பதும், நடப்பதும், கையில் டேப் லேட் வைத்து அதை பார்ப்பதுமான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது தனக்கென இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்ய போவதாக மம்மிக்கா உற்சாகமாக கூறியுள்ளார். தினக்கூலியாக இருந்த முதியவரின் வாழ்க்கை போட்டோஷூட் மூலம் மாறியது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.


கேரளா கோழிக்கோடை சேர்ந்த 60 வயது தினக்கூலி ஒருவர் சாரிக் வையாளி என்ற போட்டோகிராஃபரின் கண்ணில் பட்டு சூப்பர் மாடலாக மாறியுள்ளார். மாமிக்காவின் சொந்த ஊர் கொடிவள்ளி வெண்ண காடாகும். இவர் புகழ்பெற்ற போட்டோகிராஃபரின்ன் கண்ணில் பட்டதால் தற்போது மிகப் பிரபலமான மாடல் ஆகி சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறார்.  சமூக வலைதளங்கள் எவ்வளவு சக்திவாய்ந்த வலைதளம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.