நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்துவரும் நீதியரசர் ஏ.கே.ராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
நீட் தேர்வு குறித்து எங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை 25,000 கடிதங்களுக்கு மேல் வந்துள்ளது. பெரும்பாலும் மெயில் மூலமாகத்தான் இக்கடிதங்கள் வந்துள்ளன. இதில் சிலர் நீட் தேர்வு வேண்டும் என்றும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்பட்டால் கேட்டு வாங்குவோம்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
இவ்வாறு நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறினார்.