உலகளவில் விண்வெளிப் பந்தயம் என்பது கடந்த 50-கள் மற்றும் 60 ஆம் ஆண்டுகளில் தொடங்கியது. அந்நேரத்திலிருந்து உலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக விண்வெளிக்குப் பல ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை அனுப்பி வருகிறது. இதனால், விண்வெளியில் கடுமையான விண்வெளிக் குப்பை குவிந்துள்ளது. இந்த விண்வெளிக் குப்பைகள், புதிய ராக்கெட் ஏவுவதில் கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளது.
விண்வெளிக் குப்பைகளைக் குறைக்க மரத்தினால் சாட்டிலைட்
இந்த சிக்கலை எதிர்த்து, விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஜப்பானிய விஞ்ஞானிகள் புதிதாக மரத்தினால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். என்னது! மரத்தினால் செயற்கைக்கோளா? இது எப்படி சாத்தியம்? மரம் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள் ஆச்சே? இதில் எப்படி விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடியும்? என்று பல கேள்விகள் உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் கீழே உள்ளது.
400 ஆண்டுகள் பழமையான சுமிடோமோ குழுமத்தின் புதிய முயற்சி
ஜப்பானின் சுமிட்டோமோ வனவியல் நிறுவனம், கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மரத்தினால் செய்யப்பட்ட ஒரு செயற்கைக்கோளை 2023 ஆண்டுக்குள் தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யுமென்று, சமீபத்தில் வெளியான பிபிசி இன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமிட்டோமோ வனவியல் நிறுவனம் என்பது, ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான சுமிடோமோ குழுமத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியில் சொல்லப்படாத ரகசியம்
சுமிட்டோமோ வனவியல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்நிறுவனம் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியை எதிர்க்கும் மரப்பொருட்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நிறுவனம் உருவாக்கிவரும் இந்த தனிச்சிறப்பு பொருளை 'ஆர் அண்ட் டி ரகசியம்' என்று அழைக்கிறது. இது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடாது என்று அதன் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆனால், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் எப்படிச் செயல்படும் என்பதை நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலில், இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பூமியில் தீவிர சூழலில் தாக்குப்பிடிக்கும் பல்வேறு வகையான மரங்களைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள், தற்போதைய செயற்கைக்கோள்களைப் போலவே, தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாமல் பார்த்துக்கொள்வது.
தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாத செயற்கைகோள்
தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாத செயற்கைகோள்
தற்போதைய செயற்கைக்கோள்களைப் போலவே, தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாமல், தரையில் குப்பைகளைப் பொழியாமல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது எரிந்துபோகும் மர செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் முதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜப்பானிய விண்வெளி வீரருமான தகாவோ டோய் கூறியபோது,
மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!
விண்வெளி குப்பைகளுக்கான தீர்வு மர சாட்டிலைட்டா?
''பூமியின் வளிமண்டலத்திற்குள் இப்போது திரும்பும் அனைத்து செயற்கைக்கோள்களும் எரியக்கூடியது மற்றும் பல ஆண்டுகளாக மேல் வளிமண்டலத்தில் மிதக்கும் சிறிய அலுமின துகள்களை எரியும் போது இவை உருவாக்குகின்றது. இந்த செயல்முறை காரணமாகப் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கான தீர்வாக நாங்கள் உருவாகும் மர செயற்கைக்கோள் செயல்படும்'' என்று அவர் கூறியுள்ளார்.
விண்வெளி சோதனைக்கு உட்படுத்தப்படும் மர செயற்கைக்கோள்
தீவிர வெப்பநிலையைத் தக்கவைக்கும் சரியான வகையான மரத்தைக் கண்டுபிடித்த பிறகு, விஞ்ஞானிகள் செயற்கைக்கோளின் பொறியியல் மாதிரியை உருவாக்குவார்கள். அதன் பிறகு, விஞ்ஞானிகள் குழு செயற்கைக்கோளின் விமான மாதிரியைத் தயாரிக்கும். பின்னர், உருவாக்கப்பட்ட பாதுகாப்பான மர செயற்கைக்கோள் விண்வெளி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அச்சுறுத்தலாக மாறியுள்ள விண்வெளிக் குப்பை
பெருகி வரும் விண்வெளிக் குப்பை புதிய ராக்கெட் ஏவுதல்களுக்கும், விஞ்ஞானிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் கணிப்புப் படி, 10 சென்டி மீட்டர் அளவுக்குப் பெரிய சைசில் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 விண்வெளிக் குப்பை துண்டுகள் உள்ளன என்றும், இன்னும் பல விண்வெளிக் குப்பைகள் கணிக்க முடியாத வகையில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
அவசரப்பட்டு கொரோனா தடுப்பூசிக்காக இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க.. எச்சரிக்கும் சுகாதார நல அமைச்சகம்..
ராக்கெட் மோதலுக்கான வாய்ப்பு அதிகம்
இதன் காரணமாக விண்வெளியில் ராக்கெட் மோதலுக்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, விண்வெளி குப்பைகளைச் சுத்தம் செய்ய, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இந்த ஆண்டு நவம்பரில் சுவிஸ் ஸ்டார்ட்-அப் கிளியர்ஸ்பேஸ் எஸ்.ஏ தலைமையிலான குழுவுடன் 86 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல மாற்று யோசனை
கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக்கு ஏவப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 600 செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன என்பதும் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் விண்வெளிக் குப்பை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதனால், விஞ்ஞானிகள் விண்வெளி குப்பைகளைக் குறைக்கப் பல மாற்று யோசனைகளை உருவாக்கி வருகின்றனர்.