இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். கனமழையால் ஏற்படும் நிலச்சரிவு அவர்களை மிகவும் பாதித்துள்ளது. இதுவரை 14 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது. 15000க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மேற்கு, தெற்கு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ராணுவம் உணவுப்பொருட்களை வழங்கிவருகிறது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் ஆறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.