Breaking News :

Monday, March 27

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.4,854-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. 

இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது.  இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,781-க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,832 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 அதிகரித்து, ரூ.4,854-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரு.1 காசுகள் அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.