Breaking News :

Tuesday, December 03
.

போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு!


தமிழகத்தில் போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசத்தை  நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 09/05/2021 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் , போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசாணை எண்: G.O.(D) No. 552 Home (Transport- I) Department dt 15/05/2021 அன்று தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான 30/06/2021 காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதம் இல்லாமல் செலுத்தும் கடைசித் தேதியான 15/05/2021- னை 30/06/2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15,00000 போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.