Breaking News :

Thursday, April 25
.

எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர் - டிடிவி தினகரன்


எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர் - டிடிவி தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஆளும்கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடாமல் நியாயமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்று இருக்கிறார்கள். திமுக அதற்கான வேலையை தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் மக்கள் நல்லவர்களுக்கு மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் மக்களின் சொத்துக்களை அரசு பொது சொத்துகளை சுரண்டாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் பணம் வாங்காமல் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவேண்டும் என்றார்.

அதிமுகவிலிருந்து பாமக, பாஜக கூட்டணி முறிந்தது தொடர்பாக பதிலளித்த அவர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர். முன்னரே அவர்கள் சரியாக இருந்திருந்தால் ஒரு முறை கேடான ஆட்சியை தடுத்திருக்கலாம் என்றார்.

அண்ணா காலத்தில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ராகுல் காந்தி தமிழர் என்று சொல்வதை வரவேற்கிறேன். ஆனால் நீட்தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர்களே காங்கிரஸ் திமுக தான். மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வந்தவர்களையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளார்கள் என்றார்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.