தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. இவர் சென்னை, கொடுங்கையூர் அருகே குடும்பத்துடன் வசித்துவருகிறார். அவரது மனைவி நதியா திடீரென துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நதியா தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட விரும்பியதாகவும், கொரோனா பிரச்னை காரணமாக அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பிரச்னை ஏற்பட்டதாகவும் தமிழன் பிரசன்னா விசாரணையில் கூறியுள்ளார்.