Breaking News :

Wednesday, December 04
.

'கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு'!


தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) கொரோனா பரிசோதனைக்கானக் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

அதன்படி, "கொரோனா தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூபாய் 800- லிருந்து  ரூபாய் 550- ஆகவும், குழு மாதிரிகளுக்கு (Pooled Samples) ரூபாய் 600- லிருந்து ரூபாய் 400- ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 900 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூபாய் 300-ம் கட்டணம் (மாற்றமின்றி) நிர்ணயம் செய்யப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட RT- PCR பரிசோதனைகளுக்கான தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் (UIIC) மறுபரிசீலனை செய்தப் பிறகு மீள வழங்கப்படும்." இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.