Breaking News :

Thursday, April 25
.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது


நாடு முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து, தமிழகத்திலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன.

தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுவதால், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி விலையுடன் தனியார் தடுப்பூசி மையங்கள் சேவைக் கட்டணமாக ரூ.150 வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் மையங்களுக்கு சென்று பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சென்னையிலும் பல தனியார் மையங்களில் பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டன. கோவிஷீல்டு, கோவேக்சின் 2 தவணை போட்டவர்களுக்கு அந்தந்த தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டது. 

ஆன்லைன் மூலம் முன்பதிவு நடக்கும் மையங்களுக்கு நேரடியாக சென்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டனர். பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த  2-ம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டன.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.