Breaking News :

Friday, March 31

இனி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் கிடையாது- அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பிடத்தக்கது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.