சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (19/05/2021) காலை 10.00 மணிக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது கைகளைக் கிருமிநாசினி கொண்டு கழுவி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர், தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும், பரவி வரும் கொரோனா (COVID-19) நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக, காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களைத் தலைமைச் செயலகத்தின் முக்கிய வாயில்களில் அமைத்து, கைகளை சுத்திகரிப்பான் உபயோகித்து கழுவிச் செல்லும் வசதியை இன்று (19/05/2021) தொடங்கி வைத்தார். 'கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவுவோம் கொரோனாவை முற்றிலும் அழிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகத்திற்கு இணங்க, கொரோனா சங்கிலியை உடைத்தெறிவதற்கு இந்த வசதியினை அனைவரும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
கைகழுவி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
.