தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை முதலைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
“தமிழகத்தில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்தினை இதுவரையில் 1790 குப்பிகளை மட்டுமே தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது. இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் மருந்துக் குப்பிகளை வழங்கவேண்டும்.” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.