இயக்குநர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது.
“இந்த அரசு எல்லாத்துறைகளிலும் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக மருத்துவத்துறையில் மா.சுப்பிரமணியம் சிறப்பாக செயல்படுகிறார். எல்லோருமே நன்றாக செயல்படுகிறார்கள். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முதல்வரிடம் பேசியுள்ளோம். அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தேர்வைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். தேர்வை அடுத்த வருடம்கூட நடத்தலாம். ஆனால் மாணவர்களின் நலன் முக்கியமாகும். என்னைப்பொறுத்தவரை, பள்ளி, கல்லூரி தேர்வுகளை சிறிது காலம் தள்ளிவைக்கலாம்.
முதல்வருடனான இந்தச் சந்திப்பை நான் பெருமைக்குரியாதாக கருதுகிறேன்.
இவ்வாறு சீ மான் கூறினார்.