கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. இதற்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ள விலைநிர்ணய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.780-ஆகவும், கோவேக்ஸின் தடுப்பூசி ரூ.1410ஆகவும், ஸ்புட்னிக் தடுப்பூசி 1145 ஆகவும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.