திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சி என்ற கிராமத்தில் பிறந்த நாகஸ்வர கலைஞர் அருணாச்சலம். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் போன்றோருக்கு மிகவும் நெருக்கமாக நாதஸ்வர இன்னிசை புகழ் சேர்த்தவர். கொஞ்சும் சலங்கை எனும் திரைப்படத்தில் வந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்த இத்தகைய சிறப்புகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் நாதஸ்வர இசை பேரணி நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்