Breaking News :

Friday, April 19
.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் மறைவுக்கு கேப்டன் இரங்கல்


டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

திரையுலகில் பல வருடங்களாக நடன இயக்கம் செய்து, சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்று பெயரெடுத்தவர் திரு. சிவ சங்கர் மாஸ்டர். நான் நடித்த பல படங்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார். 
மிகவும் அன்பானவர், அனைவருடனும்  பண்பாக பழகுபவர், நடன இயக்கத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.