கொரோனாவால் பாதிக்கப்பட்ட நமது பொருளாதாரம் மீழ்வது பொருளாதார வளர்ச்சியில் தெரிகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன். உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம். ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம். நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.