Breaking News :

Monday, December 11
.

ஆவின் பால் விலை குறைவு!


தமிழகத்தில் ஒரு லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை நாளை (16/05/2021) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனை கடைகளில் ரூபாய் 3 குறைத்துப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவினில் சமன்ப்படுத்தபட்ட பால் விலை ஒரு லிட்டர் 43- க்கு பதில் ரூபாய் 40- க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், இருமுறை சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் அரை லிட்டர் ரூபாய் 20- க்கு பதில் ரூபாய் 18.50- க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூபாய் 23.50- க்கு பதில் ரூபாய் 22 ஆகவும், நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் ரூபாய் 25.50- க்கு பதில் ரூபாய் 24- க்கு விற்கப்படவுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.