மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாத இறுதியில் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக, தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி பயின்ற பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், காரணம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாணவியின் மரணம் தொடர்பாக, முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.