கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்புவுடன் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிலம்பரசன், எல்லோருக்கும் நன்றி, என்னுடன் டாக்டர் பட்டம் வாங்கியவர்களுக்கும் நன்றி, இந்த விருது என்னுடையது கிடையாது இதற்கு முழு காரணம் என் அப்பா அம்மா தான். இந்த மாதிரி அம்மா அப்பா கிடைக்கணும். இறைவனுக்கு நன்றி! என்று சிலம்பரசன் பேசினார்.