Breaking News :

Friday, October 04
.

கண்ணீர்ப்பூக்கள் - மு.மேத்தா


1974 ல் வெளியான கவிதை நூல்!அதன் எளிமையால்,இனிமையால்,அனைவரையும் தன் பால் ஈர்த்ததால் பல முறை பதிப்பிக்கப்பட்டது!வாழும் உலகோடு  உறவு கொள்ளாத எந்த கலையும் மகத்தானதாவதில்லை!அந்த உண்மையைப் புரிந்து கொண்டு எழுதியவர் மேத்தா!வடிவத்தால்,பொருளால்,உணர்த்தும் முறையால் புதுமைகளைப் புகுத்திய புது கவிதைகளின் கவிஞன்!இவரது கவிதைகள் குடும்ப வாழ்வின் துயரங்களின் துடிப்பு!காலத்தையும்,தேசங்களையும்,மொழியையும் மீறிய காதல் உணர்வுகள் இவற்றை கலை நயத்துடன்,உணர்ச்சி வேகம் கலந்து இனிய சித்திரங்களாகப் படைத்திருக்கிறார்.
       சில கவிதைகளைத் பார்ப்போம்
வைகறை விடியலில்  வார்த்தை தவம் இயற்றும் கவிஞர்களைப்  பார்த்து கேட்கிறார்
            வைகறைப் பொழுதுக்கு
             வார்த்தை தவமிருக்கும்
               வானம்பாடிகளே.......
              ............
            இந்த
            பூமி. உருண்டையைப்
             புரட்டி விடக்கூடிய
             நெம்பு கோல்  கவிதையை
            உங்களில் யார் பாடப்
             போகிறார்கள்???
என்ன ஒரு கற்பனை!பூமியைப் புரட்டிவிடும் நெம்பு கோல் கவிதை!ஒப்புமை மிகச் சிறப்பு!
            #தேசப்பிதாவுக்கு தெருப்பாடகனின் அஞ்சலி#
இந்த கவிதை தேசப்பிதா மீட்டு கொடுத்த தேசத்தின் இன்றைய நிலையைப்பற்றி புலம்புகிறது!
        #தேசப்படத்திலுள்ள 
         கோடுகள்
          விடுதலைக்குப் போராடிய
            வீரத் தியாகிகளின்
           எலும்புக்கூடு கூடுகள்!#
           #அமுத சுரபியைத்தான்
            நீ தந்து சென்றாய்!
            இப்போது
            எங்கள் கைகளில் இருப்பதோ
             பிச்சைப்பாத்திரம்#
 உன்னுடைய  படங்கள்
ஊர்வலங்கள் போகின்றன
நீ ஏன்
தலை குனிந்தபடி
நடுத்தெருவில் நிற்கிறாய்?
என கேட்கிறார்!
       #மரங்கள்# இவர் பார்வையில்
*மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்!*
*எந்த பறவைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடமை வீடுகள்!*
*மனிதர்கள் வாங்கி வைக்காத
மண்ணின் விசிறிகள்!*
மனிதர்கள் தூங்கியபிறகும் விளக்கெரிவது மரங்களுக்காக என சொல்கிறார்!
       #கண்ணீர்ப்பூக்கள்#
தலைப்பு கவிதை! இந்த நூல் வெளியான போது படித்த கவிதை!இன்னமும் மனதில் ஒலிக்கும் கவிதை!மனப்பாடமாக சொல்லும் கவிதை!நெஞ்சில் ஊடுருவிய கவிதை!
            வாழ்க்கை நாடகத்தில், எத்தனையோ காட்சிகளில், எழமுடியாத வீழ்ச்சிகள் சந்தித்த கவிஞர்  எழுதுகிறார்
               மண் வாழ்க்கை மேடையில் நான்
                     மாபெரிய காவியம்
                        மாபெரிய காவியத்தின் 
                         மனம் சிதைந்த ஓவியம்!
மனதில் அடிக்கும் புயலைப்பற்றி கூறுகிறார்
                  ஆடுகின்ற பேய்மனதில்  
                         ஆயிரமாம் ஆசைகள்
                          ஆயிரமாம் ஆசைகட்கு      
                           அனுதினமும் பூசைகள்!
                     காலமெனும் தாளிலொரு

                               கதை எழுத வந்தவன்
                               கதை எழுத வந்ததனால்
                                கனவுகளில் வெந்தவன்!
இது மட்டுமா!அற்பர்களின் சந்தையிலே அன்பு மலர் விற்று துன்ப விலை பெற்றவர்!
நெஞ்சுவக்கும் மலர் பறிக்க ,நெருப்பினில்  கை விட்டு,நினைவுகளைச் சுட்டவன்!
ஈர விழிக் காவியங்கள் எழுதி,இதயங்களை தொட்டவன்!ஓரவிழிப்பார்வைகளின் ஊர்வலத்தில் சென்றவன்!ஆனால் ஊர்வலங்கள் சென்ற போது ஒதுங்கியவன்!
வரங்கொடுக்கும் தேவதைக் வந்தபோது தூங்கி,வாழ்க்கை முழுதும் ஏங்கியவன்!
என தன் மனம் சிதைந்த ஓவியத்தை ,கவிதை எனும் தூரிகையால் தீட்டுகிறார்!
           வாழை மரத்தைப்பற்றிய கவிதையில் வாழை மரம்,மண் பார்த்து,மனித முகம் பார்த்து பேசுகிறது!
                                 *மரங்களில் நான் ஏழை-எனக்கு
                                            வைத்த பெயர் வாழை!*
                                 *கருத்தாங்கி பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
                                               கண் மூடும் புத்திரி நான்*
                                       *மண்ணில் வேரோடி
                                                மாநிலத்தில் கால் பதித்து
                                        வீசும் புயற்காற்றை!
                                                   விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்*
வாழை மரம் கூறுகிறது நான் பூமியின் புல்லரிப்பு!புதுமைகளின் இணைப்பு!புது யுகத்தின் களைப்பு!நான் தனி வாழை அல்ல! வாழையடி வாழை!இந்த கவிதையின் எளிமையைப் பாருங்கள்!அதே சமயம் வார்த்தைகள் அதற்குரிய இடத்தில் பொருந்தும் அழகினைப் பாருங்கள்!இளைஞர்கள புதுக்கவிதைகளை விரும்பி படிக்க மேத்தா ஒரு காரணம் என்பதை மறக்க இயலாது!
                        *என் இதயதோட்டத்தில்
                            ரோஜாக்களைப் பயிரிட்டேன்
                              அறுவடை செய்ய உன்னை அழைத்தேன்
                             அரிவாளோடு 
                                நீ வந்த பிறகு தான்
                                    என் தவறு எனக்கும் புரிந்தது*
என தன் தவறையும் கவிதையாக்கிய மேத்தாவின் இந்த கவிதைத்தொகுதி தொகுப்பை படித்து மகிழுங்கள்!with
Deepa Bala,Gomathisankar Gosar,Prasanna Venkatesan,Prasancbe Thamirabarani,Sumi Hari,Sugunavalli,Saratha Aariyaa,prosecutor Prosecutor Sudha,Pramila Amirthalingam,எழுத்தாளர் டாக்டர்கே.ஜி.ஜவஹர்,Mangai Linga.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.