Breaking News :

Thursday, April 25
.

ஜெ.ஜெயலலிதா' வாழ்க்கை வரலாறு


இது 'ஜெயலலிதா' அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக இருக்கும். அதுவும் கேள்விப்பட்ட பெயரான 'வலம்புரிஜான்' அவர்கள் எழுதியதாக உள்ளது என்று யாரையும் கேட்காமல் நானாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

வாசிக்க ஆரம்பித்து பார்த்தால் "வாழ்க்கை வரலாறு அது வர்த்தமான வீரருக்கும் கௌதம புத்தருக்கும் உரியது. வாழ்க்கை வரலாறு எழுதும் அளவுக்கு ஜெயலலிதா தகுதியானவர் அல்ல. ஆனால் சில நிஜங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவைப் பற்றி எழுதித் தான் ஆக வேண்டும்"  என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

எந்த ஒரு மனிதனுக்குள்ளும் நல்லவன் கெட்டவன் என்ற இரண்டு முகங்கள் இருக்கும். அதவாது "Positive Side- Negative Side" என்று வைத்துக் கொள்வோம்.  அப்படி தான் ஏதோ சில இடங்களில் மட்டும் அம்மையார் பற்றிய Negative பக்கங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தால். ஆரம்பித்த புள்ளியில் இருந்து புத்தகத்தை முடிக்க வைத்த புள்ளி வரை முழுவதும் காது கொடுத்து கேட்க முடியாத அடுத்தவரிடம் பேசமுடியாத கதைகளாகவே உள்ளது. துவக்கத்தில் 30 பக்கங்கள் கூட மேற்கொண்டு படிக்க முடியாமல் இதெல்லாம் உண்மை தானா? இப்படியெல்லாமா இருந்திருப்பார் என்றே தோன்றியது.

இந்நூல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அல்லது வன்மத்தின் காரணமாகத் தான் வெளிவந்ததா? என்றெல்லாம் யோசித்து தேடி விசாரித்து பார்த்தும் சரியான விளக்கம் யாரும் கொடுக்கவில்லை.

ஆனால் ஆசிரியரோ! "ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை பகிரங்கமாக்குவது என் நோக்கம் அல்ல; எனக்கு விருப்பமானதும் அல்ல. ஆனால் அறியப்படாத அந்தப் பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை மேரி மாதாவின் புனித வாழ்க்கையைப் போல நினைத்துக்கொண்டு தமிழர்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இமாலயத் தவறிலிருந்து இவர்களை மீட்பது ஒன்றே இக்கட்டுரையின் நோக்கம்." என்கிறார்.

1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலேயே இப்படிப்பட்ட கட்டுரை தொடராக வந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியப்படும் விதமாகவே உள்ளது.

அப்போது நக்கீரனில் வெளியான கட்டுரை தொடரையே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஏற்கனவே அரசியல் ஞானம் பெற்றோரால் மட்டுமே இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றின் உண்மை நிலையை ஆராய்ந்து எடுத்துக் கூறி விளக்க இயலும். மொத்தத்தில் இந்த புத்தகம் ஜெ. அவர்களை வார்த்தைக்கு வார்த்தை வஞ்சித்து வடித்த நூலே!

மற்றபடி புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக்காட்டாக கூறினாலும் அது தேவையில்லாமல் அரசியலின் பக்கம் கொண்டு சென்று நிறுத்துவிடும் என்று கருதி🙏

புதிதாக ஜெ. அவர்களின் வாழ்க்கையை வாசிக்க நிச்சயமாக முதலில் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது என்பது தான் நான் இதனை வாசித்து அறிந்து கொண்ட பாடம்.
_______________________________
~ நூல்: ஜெயலலிதா
~ ஆசிரியர்: வலம்புரி ஜான்
~ பதிப்பகம்: நக்கீரன்
~ பக்கங்கள்: 192
~ விலை: 150₹
~ மதிப்புரை: ரகுராவணன்
~ ID: RM-132
~ Target: 38/75
_______________________________


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.