காமம் குறித்த கதைகள் என்பது உலகம் முழுக்கவே இருந்துள்ளது. அவை அனைவராலும் விரும்பப்பட்டுள்ளது. இப்போது போல டிஜிட்டல் யுகமாக இல்லாத காலங்களில் காமமும் உடலுறவு குறித்த விஷயங்களும் பாலியல் கதைகள் வழியாக கடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அப்படி கிராமங்களில் உலாவி வந்த நாட்டுபுற பாலியல் கதைகளின் தொகுப்பே கி.ராவின் வயது வந்தவர்களுக்கு மட்டும் புத்தகம்.
பொதுவாக நம் அம்மா அப்பாக்கள் எல்லாம் எங்க காலத்துல எல்லாம் கள்ள காதலே கிடையாது என்று சொல்வதை கேட்டிருப்போம். அந்த சொல்லையே சுக்கு சுக்காக உடைக்கிறது புத்தகம், காமம் அடக்கப்படும் ஒவ்வொரு இடத்திலும் அது ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றப்படுவதை இந்த கதைகளில் காண முடிகிறது. எக்காலத்திலும் காமம் அடக்கப்படும்போது இந்த சமூகம் போட்ட கோட்டை தாண்டியும் ஒருவர் தன் கீழ்பசியை தீர்த்துக்கொள்ளவே செய்வார் என்பதே உண்மை.
இந்த கதைகளில் பெண்ணடிமைதனம் இருக்கலாம், அடக்குமுறை இருக்கலாம், உறவு முறைகளில் மீறல்கள் இருக்கலாம், ஆனால் அதையெல்லாம் கவனித்து குறை கூறி இந்த கதைகளை படிக்க முடியாது. இவை எல்லாம் நாட்டு புற பாலியல் கதைகள். அவை உள்ளது உள்ளப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
காமம் இந்த மனித வாழ்விற்கு எவ்வளவு தேவை, அந்த தேவை கிடைக்காத போது அதை அடைய எண்ணவெல்லாம் ஒருவரால் செய்ய முடியும் என்பதை இந்த கெட்டவார்த்தை கதைகள் கூறுகிறது. பேருக்குதான் கெட்ட வார்த்தை கதை என்றாலும் அனைத்து கதைகளிலும் உடல் பாகம் குறித்த வசனங்கள் மிக நுட்பமாக சரியான வார்த்தைகளை பயன்படுத்தி நமக்கு விளக்கப்பட்டுள்ளன.
எப்படி மேவயித்து பசிக்கு முக்கியத்துவம் கொடுக்குறோமோ அப்படியே கீவயத்து பசிக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும் என்ற ஒரு வசனமே போதுமானது. கதைகள் உடலுறவு மேல் மக்களுக்கு இருக்கும் பெரும் ஆவலை வெளிப்படுத்துவதாக உள்ளது. மனித வாழ்க்கையில் நடைப்பெற முடியாத எக்ஸ்ட்ரீம் லெவல் உடலுறவுகள் குறித்து கூட மக்கள் கதைகள் பேசியுள்ளனர்.
ஒரு கதையில் வரும் பெண் ஒருவர் 50 ஆடுகளை உள்ளே வைக்கும் அளவில் பெரிய உறுப்பை கொண்டிருப்பார், அந்த பெண்ணுக்கு பெரிய உறுப்பு உள்ள மாப்பிள்ளையை தேடும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஒருவன் தனது உறுப்பை பாலமாக வைத்து அதில் மக்களை போக செய்வான்.
இந்த மாதிரியாக காமம் குறித்த பல வகையான கதைகளை புத்தகம் அடக்கியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இதில் ஒரு பொக்கிஷம். கி.ரா தான் தொகுத்தது மிகவும் குறைவு என்றே கூறுகிறார்.
எனவே நீங்கள் நம் முன்னோர்கள் எப்படியான வழியில் காம கதைகளை பேசி மகிழ்ந்திருந்தனர் என்பதை அறிய இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்கலாம்.