கொய்யா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி கடுக்காய்த்தூள் மற்றும் உப்புடன் சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் ஈறு வீக்கம் பல் சொத்தை பல் கூச்சம் போன்ற பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் எளிய தீர்வாகும்.
கொய்யா இலை துளசி இலை வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க வைத்து ஆறியவுடன் அந்த நீரினால் தலையை அலசி வந்தால் அது இயற்கை கண்டிஷனர் போலச் செயல்படும் நாளடைவில் தலைமுடி வெடிப்பு சரியாகும் .
கருவேப்பிலை போட்டு தலைக்கு எண்ணெய் காய்ச்சும்போது கொய்யா இலைகளையும் சேர்த்துப் போட்டு எண்ணெய் காய்ச்சி தேய்த்து வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு முடி பலமானதாக வளரும்._