Breaking News :

Saturday, April 20
.

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள அரை மணி நேரம் போதும்! 


மாறிவரும் இந்தக் காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி நம் அக்கறை கொள்வதில்லை. அதன் விளைவு பல்வேறு நோய் காரணமாக மருத்துவ செலவு ஏற்படுகிறது. 

நமக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினந்தோறும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினார் போதும். என்றென்றும் ஆரோக்கியமாக வாழலாம்...  அதிக உழைப்பின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரே வழி தினமும் ஒரு மணி நேரம், வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்வது தான். ஒரு நாளைக்கு முடிந்த அளவு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளானாலும் சரி, இளைஞர்களானாலும் சரி, முதியவர்களானாலும் சரி, அனைத்து வயதினரும் நடை பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி. மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும்.   நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

வாக்கிங் செல்வதால் நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.