உடல் சூடு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது.
அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் சூடு சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், இத்தகைய உடல் சூட்டை எவ்வாறு தவிர்க்கலாம் வாங்க பார்ப்போம்....
உடற்சூடு பிரச்னை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
தினமும் காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வாரம் ஒருமுறையேனும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். உடல் முழுக்க சந்தனம் பூசிக் குளிக்கும் முறையும் பலன் தரும். மேலும், உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை விரதம் என்கிற முறையிலும், பேதி என்கிற முறையிலும் வெளியேற்றி உடல் சூட்டில் இருந்து நலம் பெறலாம்