இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களி
மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்; தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மக்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவுகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் கூறுகின்றன.
கொரோனா உயிரிழப்பையும் தடுக்கும் கருவிகள்!
ஆக்சிஜன் செறிவூட்டி:
ஆக்சிஜன் செறிவூட்டி காற்றிலிருந்து ஆக்சிஜனைச் சேகரிக்கும் ஒரு இயந்திரம் ஆகும்.
ஆக்சிஜன் குறைப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும் போது, இதனைச் சுவாசித்துக் கொள்ளலாம்.
இந்த செறிவூட்டியில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் 90% முதல் 95% வரை சுத்தமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் தெர்மா மீட்டர்:
டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் அடிக்கடி நமது உடல் வெப்பத்தைச் சோதித்துக் கொள்ளலாம்.
சிலருக்கு காய்ச்சல் வெளியே தெரியாமல் உள்காய்ச்சலாக இருக்கும். உள்காய்ச்சல் இருந்தாலும் உடல் வெப்ப அளவை துல்லியமாகத் தெரிந்துக்
மெடிக்கல் அலர்ட் சிஸ்டம்:
வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள், முதியோர்களுக்கு உதவுவது மெடிக்கல் அலர்ட் சிஸ்டம் ஆகும்.
தனியாக இருக்கும் போது ஏதேனும் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து வேளையில் மெடிக்கல் அலர்ட் சிஸ்டம் மூலம் நெருக்கமானவர்களுக்கு தகவல் கொடுக்கலாம்.