Breaking News :

Friday, April 19
.

ஆழ்ந்த தூக்கத்தின் அவசியம்!


உடலுக்கும், மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியைவும் தரக்கூடியது தூக்கம். அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில்தான் நிறைவேறாத ஆசைகள், நிறைவேறுதலும், மகிழ்வுடன் வாழ்வதும் நிகழ்கிறது. 

நன்கு ஆழ்ந்து உறங்கி விழித்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாக செயல்படுவதை நாம் காண்கின்றோம். மனிதன் தன்வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு தூக்கத்தில் செலவிடுகிறான். உழைத்தபின் ஒய்வெடுக்க உடலுக்கும், மனதுக்கும் ஓய்வை அளிக்கக்கூடியதே தூக்கம். உயிரற்ற போக்குவரத்து வாகனங்களுக்கே குறிப்பிட்ட தொலைவு ஓடினால் வணடியை நிறுத்தி ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. 

மனிதனின் தூக்கத்திற்கு பிறகு மூளை உற்சாகமடைகிறது. அதனால் மனிதனால் உற்சாகமாக செயல்படமுடிகிறது. 
எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு நபரால் நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இருக்கமுடிந்தால் அவர் தூங்கிய நேரமே சரியான அளவு தூக்க நேரமாகும். தாவரங்கள், மரங்கள், விலங்குகளும் உறங்குகின்றன. விலங்குகளின் தூக்கத்தின் கால அளவு மாறுபடுகிறது. 

மனிதனுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியது தூக்கம். இத்தகைய தூக்கத்தை வேலை பளு காரணமாக நாம் விடுகிறோம். இதுவே நம் உடலுக்கு மிகப்பெரிய கேடுதலுக்கு வழிவகுக்கிறது. 

தூக்கமின்மையால் பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கு இட்டுச்செல்கிறது. சரியான தூக்கமில்லாமல், தொடர்ந்து பலநாட்கள் கண் விழித்து வேலை செய்பவர்களிடம் அவர்களது பணியின் தரம் குறைகிறது என்பது நிருபணமாகியுள்ளது. 

 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.