புன்னை மரப்பட்டை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரில் புண்களைக் கழுவலாம். விரைவில் குணமாகும்.
புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டு வலி, சொறி சிரங்கு ஆகியவை குணமாகும்.
மரங்கள் மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மைகள் செய்யவே இயற்கையால் படைக்கப்பட்டவை என்பதை உணா்த்தும் இன்னொரு அடையாளம், புன்னை மரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த தமிழா்களின் வாழ்வில் ஒன்றெனக் கலந்ததுதான் தொன்மையான இந்தப் புன்னை மரங்கள். கடும் கோடைக் காலத்திலும் இதன் இலைகள் வறண்டு காய்ந்து போகாமல் வருடம் முழுவதும் பசுமையான இலைகளுடன் பச்சைப் பசேல் என்று அடா்ந்து படா்ந்து கிளைகளுடன் நிழல் தரும் மரமாக விளங்குபவை இந்த புன்னை மரம்.
கோடையில் புன்னை மர நிழலில் அமர இதன் மலா்களின் அற்புத நறுமணம் காற்றில் கலந்து அந்தப் பகுதியையே மணமிக்கதாக மாற்றி விடும். புன்னை மர நிழலில் சற்று நேரம் அமா்ந்திருந்தால், புன்னை மரக் காற்றில் கலந்துள்ள அதிக அளவு ஆக்சிஜனால் சுவாசம் வளமாகி மன அழுத்தம் நீங்கி புத்துணா்வு பெற ஒரு வாய்ப்பாக அமையும்.