உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் கோதுமையும் ஒன்று, அதில் செய்யப்படும் உணவுகளில் ஒன்றான பிடிக்கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை இதோ பார்ப்போம்...
அரை கப் கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து தனியாக வைத்துக்கொள்வும்.
அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து வைத்துகொள்வும்.
அகன்ற பாத்திரத்தில் வறுத்த கோதுமை மாவு, காஸல் கப் வெல்லம், அரை கப் தேங்காய்த்துருவல் அதுடனுடன் வறுத்த முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து சிறிது ஏலக்காய்த்தூள் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு இத்துடன் சிறிது சூடான நெய் மற்றும் தண்ணீர் தெளித்து, நன்கு மாவினை பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டி, அவற்றில் உங்களின் நான் விரல்களின் அச்சு பதியும் வண்ணம் அழுத்தமாகப் பிடிக்கவும்.
இவ்வாறு பிடித்த கொழுக்கட்டைகளை உங்களின் வீட்டில் உள்ள இட்லிப் பானையில் வேகவைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து இட்லிப் பானையை திறந்தால் சூடான, சுவையான பிடிக்கொழுக்கட்டை ரெடி