Breaking News :

Friday, April 19
.

இலுப்பை மருத்துவப் பயன்கள்


செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

பூவை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிட வீக்கங்கள் குறையும்.

இலுப்பை பிண்ணாக்கைப் பொடித்து மூக்கிலிட தும்மல் ஏற்படும். தலைவலி குறையும்.

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப் பால் சுரப்பு மிகும்.

50 கிராம் இலுப்பைப் பூவை அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம், நீரிழிவு குணமாகும்.

10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும் காய்ச்சல் தாகம் குறையும்.

மரப்பட்டை 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவும் குணமாகும்.

பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குழிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டு அரைத்து 50 மி.லி நீரில் கலந்து தற்கொலைக்காக நஞ்சு உண்டவர்களுக்குக் கொடுக்க வாந்தியாகி நச்சுப் பொருள் வெளியாகும்.

பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றிக்குத் தடவ ஆறும்.

பிண்ணாக்கை அரைத்துக் குழப்பி அனலில் வைத்து கழியாகக் கிளறி இளஞ்சூட்டில் கட்டி வர விதை வீக்கம் 4,5 தடவைகளில் தீரும்.

கப்பல் கட்டவும், இரயில் தண்டவாள ரீப்பர் கட்டை செய்யவும், தேர் செய்யவும் மற்றும் விறகாவும் மரம் பயன்படுகிறது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.