சிறிது இலைகளை நீரில் நன்கு அலசி வைத்துக்கொள்ளவேண்டும். டம்ளரில் பால் கொதிக்க வைத்த பின்னர், அலசிய துளசி இலைகளை அதில் போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து எடுத்துவிட வேண்டும். பின்னர், பாலை வடிகட்டி அதில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்
இதனை வெறும் வயிற்றில் குடித்தால் எல்லா நன்மைகளையும் பெறலாம்.
** துளசியில் யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கும், ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கிறது.
** துளசி பால் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, சளி மற்றும் காய்ச்சலை வராமல் இருக்க உதவுகிறது.
** துளசி பால் இருமல், தொண்டைப் புண், சளி போன்றவற்றை சரிசெய்வதோடு, சுவாச மண்டலத்தில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும்.
** ஆஸ்துமா நோயாளிகள் தினம் ஒரு டம்ளர் துளசி பால் குடிப்பது அவசியமாகும்.
** நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் செய்து, கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தில் நம்மை காப்பாற்றுகிறது.
** துளசி மற்றும் பாலில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து எதிர்த்துப் போராட உதவுகிறது.
** துளசி பாலில் நீர்ப்பெருக்கியானது, நம் உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைத்து சிறுநீரகத்தில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுவதால், படிப்படியாக சிறுநீரக கற்களைக் கரைக்கவும் செய்கிறது.