Breaking News :

Tuesday, April 16
.

சுவையான கோதுமை அல்வா


அல்வா என்றால் சிறிவர்கள் முதல் பெரியர்கள் வரை விரும்பாதவர்களே இல்லை. அத்தகைய அல்வாவை நம் எளிய முறையில் வீடுகளில் செய்யலாம் வாங்க பார்ப்போம்...

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு – கால் கிலோ, சர்க்கரை – முக்கால் கிலோ, எண்ணெய் – அரை கிலோ, நெய் – 100 கிராம், முந்திரிப் பருப்பு – 100 கிராம், ஏலக்காய் – 10, கேசரி பவுடர் – அரை ஸ்பூன். - கோதுமை அல்வா 

செய்முறை: 

மேற்கண்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு, முதலில் ஏலைக்காய் 10 ஐ மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கேசரி பவுடரில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, கால் கிலோ கோதுமை மாவை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி படாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். 

கோதுமை மாவு எண்ணெயில் நன்றாக கரைந்து 5 நிமிடத்திற்கு எண்ணெயிலேயே வேக வேண்டும். பின்னர், அவற்றுடன் கரைத்து வைத்துள்ள கேசரி பவுடரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பில் இருக்கும் கடாயை கீழே இறக்கி வைக்க வேண்டும். பின்னர் கொதிக்க வைத்து எடுத்து வைத்துள்ள தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். 

மீண்டும் கடையை  அடுப்பின் மீது வைத்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவேண்டும். பிறகு முக்கா கிலோ சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் பொடி செய்து வைத்துள்ள ஏலைக்காய் பவுடரை சேர்த்து கலந்து விடவேண்டும். 

இறுதியாக 100 கிராம் நெய் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் சேர்த்த எண்ணெய் அனைத்தும் மேலே வர ஆரம்பிக்கும். இப்பொழுது சுவையான கோதுமை அல்வா  ரெடி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.