நாளை சண்டே, அனைவரும் குழந்தைகளுடன் வீட்டில் இருப்போம். அப்போது, குழந்தைகளுக்கு பிடித்த முட்டை பொடிமாஸ் செய்து கொடுக்கலாம் வாங்க.
செய்முறை
நான்று வெங்காயம், ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை எண்ணெயில் வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி கலந்து விட்டால் போதும். சுவையான முட்டை பொடிமாஸ் சுவைக்க ரெடி