மனித உடலில் முக்கியமானவகைகளில் ஒன்று நமது உமிழ் நீர். நமக்கு தெரியாமல் நம் வாயை எப்பொழுதும் ஈரத் தன்மையை தக்க வைத்து காத்து வருகிறது.
உங்கள் வாயில் எச்சில் (SALIVA) குறைவாக சுரந்தால் நீரழிவு (DIABETICS) நிச்சயம்
“உமிழ்நீர்” என்பது வாயில் ஊறும் நீர். இது நாம் உண்ணும் உணவை செரிக்க உதவும். தமிழில் உமிழ்நீர் என்பதை “எச்சில்” என்றும் சொல்வர் . ஒரு நாளைக்கு மனிதனின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ் நீரில், 99 சதவீதம் தண்ணீரும், 1 சதவீதம் சோடியம், பொட்டாசியம் பைகார்பனேட் போன்ற பொருட்களும் இருக்கின்றன.
உமிழ் நீர் இல்லையென்றால் நம் வாய் என்ன ஆகும்? இல்லை நமது உடல் தான் என்ன ஆகும்?
சாதாரணமாக உமிழ்நீரின் வேலை, நாம் உண்ணும் உணவினை செரிக்க செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தன்மைகளை கட்டுப்படுத்துவது.
இதைதான் நம் முன்னோர்கள் "நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்றனர். “நொறுங்க” என்பது, ”நன்றாக மென்று” என்று பொருள். உணவை, நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி, நீண்டநாள் வாழலாம். நாம் புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால், வாயில் உமிழ் நீர் தானாக ஊறும். இதனாலேயே, முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள். உமிழ் நீர், காரத்தன்மை கொண்டது. அதிக என்ஸைம்களை கொண்டது. இதில் “ஆன்டிபயாடிக்” அதிகம் உள்ளது. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அதனால் தான், மதிய உணவில் கட்டாயமாக ஊறுக்காய் சேர்ந்தனர்.
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமைத் தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். அதேபோல் உணவு உண்ணும் 30 நிமிடம் முன்னதாக உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும் நாம் கடலைமிட்டாய்,வெல்லம் பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் நிச்சயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.
வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்தால் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்துவிடும். வாயில் உமிழ்நீர் குறைந்தால் நா வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்றவை ஏற்படலாம்.
குறிப்பாக, “சக்கரை வியாதி,“அதிகப்படியான மன அழுத்தம்” போன்றவை...... உண்டாகலாம். சர்க்கரை நோய்க்குக் காரணம் “இன்சுலின்” ஒழுங்காக சுரக்காதுதான். ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது தெரியுமா? “உமிழ்நீர்தான்” .
உமிழ்நீர்தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம். உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், இன்சுலின் சரியாக சுரப்பதில்லை. உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும். நீரிழிவுநோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.