Breaking News :

Tuesday, December 03
.

அதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?


அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும்.

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்
சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,
பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது. 

இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

 வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது. அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.

இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

 ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.