Breaking News :

Monday, May 27
.

கரிசலாங்கண்ணி எத்தனை வகை, அதன் பலன்கள் தெரியுமா?


இருவகை உண்டு பூக்களை கொண்டு  பயன் பாடு மாறும்.
 வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வகை வெளி உபயோகம் செய்யும் வகை !
  மஞ்சள் நிற பூக்கள் பூக்கும்  மூலிகை உள் உபயோகம் செய்யும் வகை!

     வெள்ளை பூ கரிசலாங்கண்ணி இலைசாற்றில் தான் முன்பு கண்மை தயார் செய்து பயன் படுத்தி வந்தோம் அந்த மை கண்களுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து  தற்போது உபயோகம் செய்யும் கண் மை எல்லாம் கெமிக்கல் மட்டுமே!

         ஆயுர்வேதம் இதை  பிருங்கராஜ் என்று இதை குறிப்பிடுவார்கள் !

       தலைமுடிவளர  இளநரை  மாற  காமாலை மண்ணீரல் கணையம் கல்லீரல் வேலைசெய்ய என்று பலவகையான பலன் தரும் மூலிகை!

           உடலை பொன் போல் புடம் போடும் மூலிகை  மஞ்சள் கரிசலாங்கண்ணி! இதனை  உபயோகம் செய்யும் முன் இதை நேரடியாக பயன் படுத்த கூடாது .

          மஞ்சள் கரிசலாங்கண்ணி பச்சையாக பலர் பயன்படுத்த மருத்துவ பலன் சொல்கிறார்கள். குழந்தை களுக்கு இரண்டு சொட்டு பெரியவர்களுக்கு 8 சொட்டு சாறு கலந்து தேன் கலந்து  கொடுத்தால் சளி இருமல் கோழை சரியாகும் என்று ஈஸியாக எழுதுகிறார்கள் . எப்படி சரியாகும் என்று விபரம் அதில் சொல்வதில்லை  இப்படி பச்சையாக சாறு கொடுத்தால்  வாந்தியாக  சேர்த்து வெளியே வரும் ! ஏற்கனவே பச்சை இலைச்சாறு மருந்து சாப்பிட பலருக்கு பயம் இதில்  மறு பதில் வரும் போது நமக்கு இன்னும் குழப்பமே வரும் மருந்து வேலை செய்யும் முன் வாந்தியாக வந்து விட்டதே   என்ற செய்யலாம் என்று மறுபடியும் ஒரு முறை கொடுப்பதா இல்லை இதோடு விடுவதா என்று புது கேள்வி வரும்.
 மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை நேரடியாக பச்சையாக உணவில்  சேர்க்க கூடாது...

 சமையல் செய்து சாப்பிடலாம்  (தஞ்சையில் இன்றும் ஒரு  எலும்பு முறிவு சித்த வைத்தியர் வைத்தியம் செய்து விட்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை போட்டு சமைத்த உணவை சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்புவார்)
 வெள்ளை கரிசலாங்கண்ணி வெளி உபயோகம்  செய்வதால் அதை பச்சையாக பயன் படுத்த எந்த தடையும் இல்லை...

🔥 மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன் முறை!

      இலையை சுத்தம் செய்து  பசும் பாலை இட்லி பாத்திரத்தில் நீருக்கு பதிலாக ஊற்றி அதன் ஆவியில்  இலையை வேக வைத்து  எடுத்துக் நிழலில் உலர்த்தி பொடியாக்கி சலித்து பயன் படுத்த வேண்டும். தினமும் கால் டீஸ்பூன் பவுடர் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அப்போது தான் அது தங்கபஸ்பத்திற்கு சமமான மருந்து!

 மேனி பொன்னாக புடம் போட்டது போல் மாறும்!
         இரத்தசோகை மாறும்  உடல் வலிவும் பொலிவும் இளமையும் கூடும் காயகல்பம் மருந்து  மூலிகை!

   உடலுக்கு அளவுக்கு அதிகமாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மூலிகை  ஆனால் இதை நேரடியாக பச்சைஇலையை நிழலில் உலர்த்தி சாப்பிட கூடாது வேக வைத்து தான் பயன் படுத்த வேண்டும்...

 💃என் சொந்த நொந்த அனுபவம் ஒன்று எழுதுறேன்  இந்த கரிசலாங்கண்ணி இலையில்  பல்துலக்கினால்  நல்லது என்று 25 வருடம் முன் படித்து விட்டு  என் மகள் வயிற்றில் ஐந்து மாத குழந்தையாக இருக்கும் போது  லோ பிளசன்டா காரணமாக மிக தீவிர பாதுகாப்பு சிகிச்சையில் இருந்தேன்  என் அம்மா வீட்டிற்கு போய் இருந்தேன்...

காலை ஆறு மணிக்கு எழுந்து யாரிடமும் சொல்லாமல் பெரிய கொல்லை புறம் போய் செடிகளை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தேன் அந்த இடத்தில் வெள்ளை கரிசலாங்கண்ணி செடி கண்ணில் பட்டது  உடனே படித்தது நினைவுக்கு வந்தது  பறித்து கழுவி விட்டு பல் துலக்கினால்  அடுத்த நொடி  வாயில் இருந்து குற்றாலம் அருவி போல  ஓவ்வொரு பல்லில் இருந்தும் நீராக சுரந்து கொண்டே இருந்தது  ஒரு நிமிட நேரத்தில்  எப்படி என்று தெரியவில்லை உடனே வாய் கொப்பளித்து விட்டேன்  நிற்கவே இல்லை எல்லா பற்களிலும்  இருந்து சுரக்கும்  நீரும் நிற்க வில்லை  அதோடு  என் காலும் நிற்க வில்லை பூமியில் ஐந்து நிமிடத்தில்  பூமி சுற்ற தொடங்கியது தலையை சுற்றி நட்சத்திரம் பறந்தது  அந்த இடத்தில் யாருமே இல்லை  நாலு அடி எடுத்து வைக்க முடியவில்லை  நிலை தடுமாறியது  அடுத்த நொடி பூமியில்  நின்றேன் கிடந்தேன்!என்று  கிடந்தேன்!  

ரொம்ப நேரம் கழித்து என் தங்கை   படுத்து இருந்த இடத்தில் ஆளை காணோமே என்னை தேடி கொண்டு வந்து  முகத்தில் தண்ணீர்  தெளித்து  தண்ணீர் கொடுத்து எழுப்பி விட்டார் நான் யாரிடமும் கரிசலை இலை பல் துலக்கிய விஷயத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை கப்சிப் என்று இருந்தேன். அதன் பிறகு  பல வருடங்கள் கழித்து தான்வெள்ளை கரிசலாங்கண்ணி இலை வெளி உபயோகம் மட்டுமே செய்ய வேண்டும் என்று  வேறு ஒரு சித்த வைத்திய நண்பர் சொன்னார்.,.

 மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பற்றிய  முக்கியமான மருந்து பாம்பு கடிக்கு இதன் சாறு மிகவும் முக்கியமான மருந்து வாழைபட்டை சாறு செய்யும் அதே பலனை மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறும் செய்யும்! பச்சையாக  சாறு பாம்பு கடிக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்! இந்த செடி இருக்கும் இடத்தில் பாம்பு வராது. இதன் செடிகள் இருக்கும் இடத்தில் சுபீட்சமாக இருக்கும்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.