அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு சொிமானம் ஆகக் கூடியது. சிறு நீா்ப் பிரச்சினையை சாி செய்யும். இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் குணப்படுத்தும்.
சமீபக்கால ஆராய்ச்சியில் முடிவுகளில் வெள்ளாிக்காய் கீல் வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளாிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாாிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம். ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளாிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீா் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயா்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை அமைந்துள்ளன.