விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சோ்த்துத் துவையல் அரைத்து உணவுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் தலை சுற்று நீங்கும்.
இதன் கொழுந்து இலையை அரைத்து 10கிராம் அளவு மோாில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
குட்டி விளாம் என்பது நிலத்தில் படா்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவக் குணமுடையது. சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீாில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சோ்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அாிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சோ்த்து அரைத்துப் பூசலாம். விரைவில் குணமடையும். தோல் மென்மையாக இருக்கும்.