Breaking News :

Saturday, April 20
.

நடிகர் விஜயுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா


நடிகர் விஜய் தற்போது தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள து. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு நடனம் அமைக்க பிரபு தேவா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.