Breaking News :

Thursday, April 25
.

ஜெமினி நிறுவன அதிபர் எஸ் எஸ் வாசன்


தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட படமும் அதி பிரிமிப்பு கொண்ட விளம்பரங்களையும் கொடுத்து பிற அனைத்து மொழி படத் தயாரிப்பு நிறுவனங்களையும் திரும்பி பார்க்க வைத்த பெருமிதமிகு ஜெமினி நிறுவன அதிபர் எஸ் எஸ் வாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அவர் தயாரித்த படங்கள் பிற மொழிகளில் டப்பிங்யும் ரீமேக்மாகி உள்ளது. இவரின் ஓளிவிளக்கு போன்ற படங்கள் மாற்று மொழிகளில் வந்ததையும் இங்கு எடுத்து வெற்றி கண்டு உள்ளார். எம் ஜி ஆர் அவர்களுக்கு சிறப்பான ரோல் கொடுத்து சதிலீலாவதி மூலம் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் இவர். ஓளிவிளக்கு படம் எம் ஜி ஆர் அவர்கள் உடல்நிலை மிக மோசமாக இருந்தப்போது அந்த படமும், அப் பட பாடலில் ஓன்றான ஆண்டவனே உன் பாதங்களை....... பாடலும் எங்கும் ஓளியும் ஓலியானது. ஜெமினிக்கு நல்ல கேரியர் கொடுத்த வஞ்சிக்கோட்டை வாலிபன் இவர் தயாரிப்பே. நடிகர் திலகம் அவர்கள் நியூ வேவ் ஹீரோ போல் வலம் வந்த 60 களின் மத்தியில் பல பிள்ளைக்குட்டிகளை கொண்ட குடும்பஸ்தனாக மோட்டார் சுந்தரம் பிள்ளையில் நடிக்க வைத்து ஆச்சரியப்படுத்தி வெற்றி கண்டவர்
எஸ் எஸ் வாசன்.

இன்றும் இவரின் சந்திரலேகா உலக சினிமா வரலாற்றில் தடமும் இந்திய சினிமாவின் தடயமும் தமிழ் சினிமாவின் தங்கமும் அதுவே என்கிற பெருமை இருக்கு.

எழுத்து ஆளுமையாளர்கள் பலரையும் வாசகர்களை தரமானவரகளாகவும்  உருவாக்கிய பெருமை கொண்டு ஓன்றிலிருந்து பல இதழ்கள் விரிந்திருக்கும் ஆனந்தவிகடனை தொடங்கியவர் எஸ் எஸ் வாசன் அவர்கள்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.