Breaking News :

Monday, April 12

விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை 

பாதசனியாக அமர்ந்து தொல்லைப்படுத்திய சனி பகவான் இனிமேல்  ராஜயோகம் தரும் 3-ம் வீட்டில் அமர்ந்து,
யோகங்களை வாரி வழங்குவார்.  இழுபறியாகவே இருந்த நிலை இனி முடிவுக்கு வரும். ஏமாற்றம்,
இழுபறியில் இருந்து  விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த சண்டை விலகும்.  மனம்விட்டுப் பேசுவீர்கள்.
சொத்தை விற்ற பணம் விரைவில் வந்து சேரும்.  எதிர்காலத்துக்காக சேமிப்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி
சிறப்பாக இருக்கும். அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புண்ணியதலங்களுக்கு  
சென்றுவருவீர்கள். புது முதலீடுகள் செய்வீர்கள்.  

பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.  உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களும்  
புரிந்துகொள்வார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். முன்னேற்ற பாதைக்கும் கொண்டு செல்வதாக
அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.