3-வது வீட்டில் அமர்ந்து கொண்டு தைரியம் விடாமுயற்சி இரண்டையும் தந்த சனி, இனி 4-வது வீட்டில்
அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனி என்று பயப்பட வேண்டாம். சனி பகவான் ஓரளவு நல்லதையே செய்வார்.
கெட்டவைகள் குறையும். முடங்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி
வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர்கள், கணவருடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
மாமியார், மாமனாரிடம் அனுசரிப்பு தேவை. சோர்வு, களைப்பு வந்து போகும். பணவரவு அதிகரிக்கும்.
எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். மற்றவர்களை நம்ப வேண்டாம். உத்தியோகத்தில்
வேலைச்சுமை உண்டாகும். சக ஊழியர்களை அரவணைத்துப் போவது நல்லது. நல்லது கெட்டது என்று
அனைத்தையும் கற்றுத் தருவதாக அமையும் இந்த சனிப் பெயர்ச்சி.