5-ம் வீட்டில் அமர்ந்து படுத்திய சனி பகவான் இனி அதிரடி யோகங்களை தருவார். குடும்பத்தில் உங்கள்
ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். கணவர் மனைவிடம் பாசமாகப் இருப்பார். பிள்ளைகள் அறிவுரையை
ஏற்பார்கள். உறவுகள் இடையே இருந்த பிரச்னை நீங்கும். சொத்து பிரச்னைகள் தீரும். தைரியமாக முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவம் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.
வியாபாரத்தில் மறைமுகமாகத் தொல்லைகளை முறியடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
திறமைகளை காட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். திடீர்
யோகங்களை அள்ளித் தருவதாக அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.